ADDED : ஆக 14, 2026 08:53 PM
ஸ்ரீபெரும்புதுார்: தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால கட்டுமான பணிக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பியை திருடிய இரண்டு சிறுவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.
சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியில், ஸ்ரீபெரும்புதுார் செக்போஸ்ட் ஆர்ச் அருகே, மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேம்பால கட்டுமான பணிக்காக, அப்பகுதியில் இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளன.
சில நாட்களாக மர்மநபர்கள் இரும்பு கம்பியை திருடி செல்வதாக கூறப்படுகிறது. நேற்று அதிகாலை, மர்ம நபர்கள் இருவர் இரும்பி கம்பியை திருட முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி மற்றும் ஊழியர்கள், 16 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்களை பிடித்து ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
