/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவூர் சுந்தரேஸ்வரர் கோவிலில் 42 ஆண்டுக்கு பின் பிரம்மோத்சவம்
/
கோவூர் சுந்தரேஸ்வரர் கோவிலில் 42 ஆண்டுக்கு பின் பிரம்மோத்சவம்
கோவூர் சுந்தரேஸ்வரர் கோவிலில் 42 ஆண்டுக்கு பின் பிரம்மோத்சவம்
கோவூர் சுந்தரேஸ்வரர் கோவிலில் 42 ஆண்டுக்கு பின் பிரம்மோத்சவம்
ADDED : ஜூன் 01, 2025 12:29 AM

குன்றத்துார்,குன்றத்துார் அருகே கோவூரில், பழமை வாய்ந்த சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. நவக்கிரகங்களில் புதன் தலமாக விளங்கும் இந்த கோவில் பிரம்மோத்சவ விழா, தேர் சேதம் காரணமாக, 42 ஆண்டுகளாக நடக்கவில்லை.
பக்தர்கள் கோரிக்கையை அடுத்து, 1 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தேர் சமீபத்தில் உருவாக்கப்பட்டது.
இதையடுத்து இந்தஆண்டு பிரம்மோத்சவ விழா, 42 ஆண்டுகளுக்கு பின், நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, வழிபாடு செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் விழா, 6ம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.