/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சுவாமி வீதி உலா இன்றி பிரம்மோற்சவம் துவக்கம்
/
சுவாமி வீதி உலா இன்றி பிரம்மோற்சவம் துவக்கம்
ADDED : மார் 15, 2024 08:57 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
ஆனால், இக்கோவிலில், 17 கோடி ரூபாயில் திருப்பணி துவங்கியிருப்பதால், பங்குனி உத்திர விழா நடப்பாண்டு நடைபெறுமா அல்லது ரத்து செய்யப்படுமா என, பக்தர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
இதுகுறித்து, உபயதாரர்களுடனான கூட்டமும், கோவில் நிர்வாகம் சார்பில் சமீபத்தில் நடைபெற்றது. ஆனால், பக்தர்களுக்கு உற்சவம் குறித்து தெளிவான பதில் தெரிவிக்காமல் இருந்தது.
இந்நிலையில், கோவிலின் கொடிமரம் திருப்பணி செய்வதால், கொடியேற்றம் இன்றி, சுவாமி வெளிப்புறப்பாடு இன்றி, பிரம்மோற்சவம் துவங்கியுள்ளது.
இம்மாதம், 28ம் தேதி வரை, உற்சவர் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளி, பூஜை மற்றும் அலங்காரம் நடைபெறும் என, அறநிலைய துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

