ADDED : ஆக 07, 2025 01:45 AM
காஞ்சிபுரம்:இந்திய மருத்துவ சங்கம், காஞ்சிபுரம் கிளை சார்பில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் நடந்தது.
காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் உள்ள நகர்ப்புற சுகாதார நிலையத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு இந்திய மருத்துவ சங்கம் காஞ்சிபுரம் கிளை தலைவர் மருத்துவர் ரவி தலைமை வகித்தார்.
மாநகராட்சி சுகாதார அலுவலர் மருத்துவர் அருள்நம்பி, தாய்பப்பால் ஊட்டுதலின் முக்கியத்துவத்தையும் அரசு நலத்திட்ட உதவிகள் குறித்தும், தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்து குறித்து சங்க செயலர் முத்துகுமரன் ஆகியோர் விளக்கினர்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவ சங்க முன்னாள் தலைவர் மனோகரன், அரசு மருத்துவர் அபர்ணா, பெண்கள் மருத்துவ சங்க செயலர் காஞ்சனா உள்ளிட்டோர் தாய்ப்பால் ஊட்டுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வேந்தர் ஜெயந்தி, முதல்வர் டாக்டர் ராஜசேகர் வழிகாட்டுதலின்படி நடந்த உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு சமுதாய மருத்துவதுறை தலைவர் பேராசிரியர் சங்கர் தலைமை வகித்தார். உதவி பேராசிரியர் சக்திவேல் முன்னிலை வகித்தார். 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.