/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிமென்ட் கால்வாயில் விழுந்த கொத்தனார் பலி
/
சிமென்ட் கால்வாயில் விழுந்த கொத்தனார் பலி
ADDED : நவ 12, 2024 08:34 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, திருமங்கலம் கிராமம், ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை, 42, கொத்தனார். நேற்று முன்தினம் மாலை, மது போதையில் வீட்டின் அருகே, சிமென்ட் சாலையோரம் படுத்திருந்தார்.
அப்போது, மது போதையில் அருகே உள்ள சிமென்ட் கால்வாயில் விழுந்தார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே மயக்கத்தில் இருந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.
அங்கு, மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சுங்குவார்சத்திரம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்.