/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்பு அமைக்காமல் பாலப்பணி: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
தடுப்பு அமைக்காமல் பாலப்பணி: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
தடுப்பு அமைக்காமல் பாலப்பணி: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
தடுப்பு அமைக்காமல் பாலப்பணி: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 24, 2025 02:01 AM

உத்திரமேரூர்: திருப்புலிவனத்தில், காரணை மண்டபம் சாலையில் சிறுபாலம் கட்டும் இடத்தில், எச்சரிக்கை தடுப்பு ஏதும் வைக்காததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
உத்திரமேரூர் -- காஞ்சிபுரம் நெடுஞ்சாலை, திருப்புலிவனத்தில் காரணை மண்டபம் சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலையை பயன்படுத்தி இளநகர், களியாம்பூண்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தோர் காஞ்சிபுரம், உத்திரமேரூர் பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.
அதேபோல, திருப்புலி வனம், வெங்கச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து செய்யாறு, வந்தவாசி பகுதிகளுக்கு செல்கின்றனர். இச்சாலை, போதிய இடவசதி இல்லாததால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டு, விபத்து நடந்து வந்தது.
இதை தடுக்க சாலையை விரிவாக்கம் செய்ய, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, ஊரக வளர்ச்சி துறையின் மூலமாக, சாலை விரிவாக்கம் பணி இரு வாரங்களுக்கு முன் துவக்கப்பட்டது.
தற்போது, திருப்புலிவனம் பகுதியில் சிறுபாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அதற்காக, அப்பகுதியில் வாகன போக்குவரத்துக்கு ஏற்ற வகையில், மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், சிறுபாலம் அமைக்கும் இடத்தில், எச்சரிக்கை தடுப்புகள் ஏதும் வைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி, சிறுபால பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து, விபத்தில் சிக்கி வருகின்றனர்.
இதை தடுக்க, சிறுபாலம் கட்டும் பகுதியில், எச்சரிக்கை தடுப்பு அமைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

