/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்புச்சுவர் இல்லாத பாலம் இளையனார்வேலுாரில் அபாயம்
/
தடுப்புச்சுவர் இல்லாத பாலம் இளையனார்வேலுாரில் அபாயம்
தடுப்புச்சுவர் இல்லாத பாலம் இளையனார்வேலுாரில் அபாயம்
தடுப்புச்சுவர் இல்லாத பாலம் இளையனார்வேலுாரில் அபாயம்
ADDED : ஜன 11, 2025 01:20 AM

வாலாஜாபாத்:இளையனார்வேலுாரில் இருந்து வள்ளிமேடு வழியாக, வாலாஜாபாத் செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இளையனார்வேலுார், சித்தாத்துார் உள்ளிட்ட கிராமத்தினர் இச்சாலை வழியாக வள்ளிமேடு, கம்பராஜபுரம், தம்மனுார், அவளூர் மற்றும் வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இச்சாலையில் காவாந்தண்டலம் செய்யாற்றில் இருந்து, கம்பராஜபுரம் வழியாக செல்லும் நீர்வரத்து கால்வாயின் இணைப்பாக தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தரைபாலத்தின் இருபுறமும் இடைவெளி விட்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும், அது போதிய பாதுகாப்பனதாக இல்லாததால், விபத்து அபாயம் உள்ளது.
எனவே, இந்த தரைபாலத்திற்கு முழுமையான தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.