/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குழாய் உடைந்து சாலையில் குடிநீர் வீண்
/
குழாய் உடைந்து சாலையில் குடிநீர் வீண்
ADDED : மே 17, 2025 01:57 AM

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், வைப்பூர் ஊராட்சிக்குட்பட்ட வஞ்சுவாஞ்சேரியில், 2,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு, ஊராட்சி நிர்வாகம் சார்பில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து, நிலத்தடியில் குழாய் பதித்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், வஞ்சுவாஞ்சேரி பேருந்து நிறுத்தம் அருகே, நிலத்தடியில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, இரண்டு நாட்களாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.
உடைந்த குழாயில் இருந்து வெளியேறும் குடிநீர், வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் வடிந்து செல்வதால், சகதியான பகுதியில், இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
எனவே, உடைந்த குழாயை சீரமைக்க, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.