/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குழாயில் உடைப்பு வீணாகும் குடிநீர்
/
குழாயில் உடைப்பு வீணாகும் குடிநீர்
ADDED : ஜன 30, 2025 12:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏனாத்துார் : வாலாஜாபாத் ஒன்றியம், ஏனாத்துார் - காஞ்சிபுரம் சாலையோரம், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஏனாத்துார் பிரதான சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரத்திற்கும் மேலாக குடிநீர், சாலையில் வழிந்தோடி வருகிறது.
தொடர்ந்து வெளியேறும் குடிநீரால் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலையும் சேதமடைந்து வருகிறது. மேலும், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என, பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

