/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பணத்தை திருப்பி தராததால் தம்பியை கொன்ற அண்ணன்
/
பணத்தை திருப்பி தராததால் தம்பியை கொன்ற அண்ணன்
ADDED : செப் 10, 2025 09:36 AM
கானத்துார்: பணத்தை திருப்பி தராததால் ஆத்திரமடைந்த அண்ணன், தம்பியை வெட்டி கொலை செய்தார்.
நேபாளத்தை சேர்ந்தவர் தேஜ், 25. இவர், மனைவி மற்றும் குழந்தைகளுடன் இ.சி.ஆர்., உத்தண்டியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், காவலாளியாக பணிபுரிந்தார்.
இவர், தன் அண்ணன் ஜீவன், 32, என்பவரிடம், ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். நான்கு மாதங்களாக, கொடுத்த கடனை ஜீவன் திருப்பி கேட்டு வந்துள்ளார்.
ஆனால், வாங்கிய பணத்தை தேஜ் தராததால், நேபாளத்தில் இருந்து சென்னை வந்த ஜீவன், முட்டுக்காடு பகுதியில் உள்ள நண்பர் சுரேஷ் என்பவருடன் தங்கினார்.
நேற்று முன்தினம் இரவு, ஜீவன் அழைப்பின் பேரில், அவர் தங்கி இருந்த வீட்டுக்கு தேஜ் சென்றார்.
அங்கு வைத்து, தேஜிடம் ஜீவன் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஜீவன், இளநீர் வெட்டும் கத்தியால், தேஜை சரமாரியாக வெட்டினார்.
இதில் மயங்கி விழுந்த தேஜை, அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஜீவன் துாக்கி சென்றார்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், தேஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். கானத்துார் போலீசார், ஜீவனை கைது செய்து விசாரிக்கின்றனர்.