/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பி.எஸ்.என்.எல்., வெள்ளி விழா பேரணி
/
பி.எஸ்.என்.எல்., வெள்ளி விழா பேரணி
ADDED : அக் 03, 2025 09:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழாவையொட்டி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்ற பேரணி காஞ்சிபுரத்தில் நடந்தது.
பி.எஸ்.என்.எல்., நிறுவனம் துவங்கி, 25 ஆண்டுகள் நிறைவு பெற்று வெள்ளி விழாவை கொண்டாடுகிறது. இதையொட்டி, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்ற பேரணி காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், பங்கேற்றவர்கள் வெள்ளி விழா தொடர்பான வாசகம் இடம்பெற்ற பதாகை ஏந்தி பேரணி சென்றனர். தொடர்ந்து, பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில், கேக் வெட்டி வெள்ளி விழாவை கொண்டாடினர்.