/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பவுத்தர்கள் சங்க பேரவை பேரணி பல நாட்டு புத்த பிக்குகள் பங்கேற்பு
/
பவுத்தர்கள் சங்க பேரவை பேரணி பல நாட்டு புத்த பிக்குகள் பங்கேற்பு
பவுத்தர்கள் சங்க பேரவை பேரணி பல நாட்டு புத்த பிக்குகள் பங்கேற்பு
பவுத்தர்கள் சங்க பேரவை பேரணி பல நாட்டு புத்த பிக்குகள் பங்கேற்பு
ADDED : பிப் 19, 2025 12:53 AM

காஞ்சிபுரம்:தமிழ்நாடு பவுத்தர்கள் சங்க பேரவை சார்பில், காஞ்சிபுரத்தில் நேற்று புத்த பிக்குகள் பேரணி நடந்தது. காஞ்சிபுரம் பூக்கடைச்சத்திரம் பகுதியில் துவங்கிய பேரணி, காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலைய சாலை வழியாக, வையாவூரில் இருக்கும் புத்தர் திருக்கோவிலை வந்தடைந்தது.
இந்த பேரணியில், அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் புத்தர் சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இதில், தேசியக்கொடி மற்றும் பவுத்த கொடி கையில் ஏந்தியவாறு, புத்த பிக்குகள் பாலி மொழியில் பிரார்த்தனை செய்து கொண்டே சென்றனர். புத்தர் கோவிலை பேரணி வந்தடைந்ததும், புத்தர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. புத்தரின் அஸ்தி வைக்கப்பட்டிருந்த ஸ்தூபி திறப்பு விழா நடந்தது.
இதில், வி.சி., தலைவர் திருமாவளவன், சிறுபான்மையின ஆணைய தலைவர் அருணசேச, தமிழ்நாடு பவுத்தர்கள் சங்க பேரவையின் சங்காதிபதி தர்மசீலன் மற்றும் வியட்நாம், தாய்லாந்து, கம்போடியா, இந்தியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட புத்தக பிக்குகள் பங்கேற்றனர்.