/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்பின்றி புதர்மண்டிய ராமானுஜபுரம் குளம்
/
தடுப்பின்றி புதர்மண்டிய ராமானுஜபுரம் குளம்
ADDED : செப் 22, 2024 03:31 AM

மதுரமங்கலம் : சுங்குவார்சத்திரம் அடுத்த, மதுரமங்கலம் - ராமானுஜபுரம் - பிள்ளைச்சத்திரம் இடையே, நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில், பிரதான சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக, ஏகனாபுரம், மதுரமங்கலம், ராமானுஜபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தினர் பிள்ளைச்சத்திரம் வழியாக, வேலுார், சென்னை உள்ளிட்ட பகுதிக்கு சென்று வருகின்றனர்.
இச்சாலையோரம், ஆபத்தான நிலையில் பொது குளம் உள்ளது. இக்குளத்தில், நாணல் புல், அல்லி, தாமரை ஆகிய செடி கொடிகள் படர்ந்து புதர் மண்டி உள்ளன.
குறிப்பாக, ராமானுஜபுரம் சாலை ஓரம் இருக்கும் குளத்திற்கு, போதிய பாதுகாப்பு தடுப்பு கம்பிகள் அறவே இல்லை. இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குளத்தில் தவறி விழும் நிலை உள்ளது.
எனவே, மதுரமங்கலம் - ராமானுஜபுரம் - பிள்ளைச்சத்திரம் இடையே இருக்கும் குளத்திற்கு தடுப்பு கம்பிகளை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.