/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையை ஆக்கிரமித்து கட்டடம் ஆத்தனஞ்சேரி மக்கள் கலெக்டரிடம் புகார்
/
சாலையை ஆக்கிரமித்து கட்டடம் ஆத்தனஞ்சேரி மக்கள் கலெக்டரிடம் புகார்
சாலையை ஆக்கிரமித்து கட்டடம் ஆத்தனஞ்சேரி மக்கள் கலெக்டரிடம் புகார்
சாலையை ஆக்கிரமித்து கட்டடம் ஆத்தனஞ்சேரி மக்கள் கலெக்டரிடம் புகார்
ADDED : நவ 22, 2025 01:01 AM
காஞ்சிபுரம்: படப்பை பகுதியில் உள்ள ஆத்தனஞ்சேரி கிராமத்தில் சாலையை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டுவதாக, கிராம மக்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
ஆத்தனஞ்சேரி கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை ஊராட்சிக்குட்பட்ட ஆத்தனஞ்சேரி கிராமத்தில், கீழண்டை மாடவீதியில் சர்வே எண்.273/1 ல் உள்ள சாலையை, அங்கு வசிக்கும் சகோதரர்கள் மூன்று பேர் சேர்ந்து, நத்தம் நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை, புகாராகவும், வழக்கு தொடுத்தும் முறையீடு செய்தோம்.
அதில், மாவட்ட கலெக்டர் உத்தரவுபடி, ஸ்ரீபெரும்புதுார் கோட்டாட்சியர் மற்றும் குன்றத்துார் வட்டாட்சியர் தலைமையில் ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றப்பட்டது. வட்டாட்சியர் ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தி ல், மீண்டும் கட்டடங்கள் கட்டப்படுகின்றன.
சாலையை ஆக்கிரமித்து படிக்கட்டுகள் கட்டப்படுகின்றன. எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டு ம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.