/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கான பஸ் பாஸ் அவகாசம் நீட்டிப்பு
/
மாற்றுத்திறனாளிகளுக்கான பஸ் பாஸ் அவகாசம் நீட்டிப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான பஸ் பாஸ் அவகாசம் நீட்டிப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான பஸ் பாஸ் அவகாசம் நீட்டிப்பு
ADDED : ஏப் 03, 2025 07:49 PM
காஞ்சிபுரம்:மாற்றுத்திறனாளிகளுக்கு, தமிழக அரசால் இலவச பயணச்சலுகை வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்டம் முழுதும் சென்று வருவதற்கும் மற்றும் கல்வி பயிலும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும், பணிக்கு செல்பவர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு செல்பவர்களுக்கு 2024- - 25ம் ஆண்டுக்கான இலவச பஸ் பாஸ் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இந்த பஸ் பாஸ் அட்டை மார்ச் 31ம் தேதி வரை செல்லத்தக்க வகையில் கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மேலும் மூன்று மாதங்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, ஜூன் மாதம் 30ம் தேதி வரை பேருந்துகளில் பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

