/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஞாயிற்றுக்கிழமைகளில் 'கட்' செய்த பேருந்து மீண்டும் இயக்கம்
/
ஞாயிற்றுக்கிழமைகளில் 'கட்' செய்த பேருந்து மீண்டும் இயக்கம்
ஞாயிற்றுக்கிழமைகளில் 'கட்' செய்த பேருந்து மீண்டும் இயக்கம்
ஞாயிற்றுக்கிழமைகளில் 'கட்' செய்த பேருந்து மீண்டும் இயக்கம்
ADDED : டிச 16, 2025 04:28 AM
உத்திரமேரூர்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, உத்திரமேரூர் - பாப்பநல்லுார் வழி தடத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு பேருந்தின் இயக்கம் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம் ஒன்றியம், பாப்பநல்லுாரில் இருந்து, நாஞ்சிபுரம், காரியமங்கலம் வழியாக தடம் எண்: 89ஏ., அரசு பேருந்து உத்திரமேரூர் மற்றும் செங்கல் பட்டு வரை இயங்குகிறது.
பாப்பநல்லுார் மற்றும் காவனுார் புதுச்சேரி கூட்டுச்சாலையை சுற்றி உள்ள கிராம மக்கள், இப்பேருந்து மூலம் பயணித்து உத்திரமேரூர் மற்றும் செங்கல்பட்டுக்கு சென்று வருகின்றனர்.
நாளொன்றுக்கு மூன்று வேளை இயக்கப்படும் இப்பேருந்து, சில மாதங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் நாள் முழுக்க இயக்குவதில்லை எனவும் அந்நாளில், தடம் எண்: 76சி., என அப்பேருந்தின் போர்டு மாற்றி காஞ்சிபுரம் - பூந்தமல்லி வழி தடத்தில் இயக்கு வதாகவும் தெரிவித்தனர்.
இதனால், பாப்பநல்லுார் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் போக்குவரத்திற்கு சிரமப்பட்டு வந்தனர்.
இதுகுறித்த செய்தி, கடந்த 5ம் தேதி நம் நாளிதழியில் வெளியானது. அதன் தொடர்ச்சியாக போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் முறையாக பேருந்து இயக்கப்படுகிறது.

