/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சமூக பணிக்கான விருது விண்ணப்பிக்க அழைப்பு
/
சமூக பணிக்கான விருது விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூன் 26, 2025 10:38 PM
காஞ்சிபுரம்,:சமூக பணியில் சிறப்பாக பணியாற்றிய நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திகுறிப்பு:
தனியார், பொதுத்துறை, கூட்டுத்துறை நிறுவனங்களை சார்ந்த தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்கள், தங்களது சமூக பொறுப்பின் ஒரு பகுதியாக தமிழகத்தில் பல்வேறு சமூக பொருளாதார மேம்பாட்டுப் பணிகளில் பாராட்டத்தக்க வகையில் ஈடுபடுவதை ஊக்குவித்து விருது வழங்கப்படுகிறது.
ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும், நற்சான்றிதழும் கொண்ட இவ்விருது ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்திற்கு ஒரு விருது வீதம், சிறப்பாக பணிசெய்த தலை சிறந்த தொழில் மற்றும் சிறந்த வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
பங்கு நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் தனிநபர் நிறுவனங்கள், அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள், தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்புகள் இவ்விருது பெற விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் www.tnrd.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தகுதிவாய்ந்த நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்களை இணையதள வழியில் ஆவணங்களுடன் 45 தினங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.