/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கைவினை திட்டத்தில் கடனுதவி பெற அழைப்பு
/
கைவினை திட்டத்தில் கடனுதவி பெற அழைப்பு
ADDED : டிச 29, 2024 10:48 PM
காஞ்சிபுரம்:தமிழக அரசால் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ், கைவினை கலைகள் மற்றும் கலைத்தொழில்கள் செய்வோர்க்கு சுயவேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், 3 லட்சம் வரை பிணையற்ற கடனுதவி மற்றும் 25 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
மேலும், 5 சதவீதம் வரை வட்டி மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தொழில்முனைவோருக்கு திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க, 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். எந்த வகுப்பினராகவும் இருக்கலாம்.
இத்திட்டத்தின் கீழ் கட்டட வேலைகள், மரவேலைப்பாடுகள், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், தோல் கைவினைப் பொருட்கள், காலணிகள் தயாரித்தல், மீன்வலை தயாரித்தல், மூங்கில், பிரம்பு, சணல், பனை வேலைப்பாடுகள் உள்ளிட்ட 25 தொழில்கள் துவங்க விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தின்கீழ், www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில் இயங்கும் மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தை நேரிலோ அல்லது 044 - -2723 8837 எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.