/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வலு துாக்கும் வீரர்களுக்கு அழைப்பு
/
வலு துாக்கும் வீரர்களுக்கு அழைப்பு
ADDED : ஜன 24, 2024 10:36 PM
சென்னை:திருவொற்றியூரில் நடக்க உள்ள மாவட்ட அளவிலான கிளாசிக் வலு துாக்கும் போட்டியில் பங்கேற்க வீரர் - வீராங்கனையருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
சேலஞ்ச் ஜிம் மற்றும் சென்னை மாவட்ட வலு துாக்கும் சங்கம் இணைந்து, மாவட்ட அளவில் வலு துாக்கும் சாம்பியன்ஷிப் போட்டியை, திருவொற்றியூரில் வரும் 28ம் தேதி நடத்துகின்றன.
இதில் ஸ்குவாட், பெஞ்ச் பிரிஸ், மற்றும் 'டெட் லிப்ட்' ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன. போட்டியில், சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டி நடக்கிறது.
ஒவ்வொரு பிரிவிலும், ஸ்ட்ராங் உமன் மற்றும் ஸ்ட்ராங் மென் ஆகிய பட்டங்கள் வழங்கப்படுகின்றன. போட்டி நடக்கும் இடத்தில் எடை சரிபார்ப்புடன், காலை 7:00 மணிக்கு போட்டிகள் துவங்குகின்றன.
பங்கேற்க விரும்பும் சென்னை வீரர் - வீராங்கனையர், நேரடியாக பங்கேற்கலாம்.
மேலும் விபரங்களுக்கு, 98413 15735 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாவட்ட வலு துாக்கும் சங்க துணை செயலர் சம்பத் தெரிவித்து உள்ளார்.