/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாய் கட்டும் பணி ஓரிக்கையில் துவக்கம்
/
கால்வாய் கட்டும் பணி ஓரிக்கையில் துவக்கம்
ADDED : ஜூலை 27, 2025 08:23 PM
ஓரிக்கை:காஞ்சிபுரம் மாநராட்சி, ஓரிக்கை, 46வது வார்டில், 9.90 லட்சம் ரூபாய் செலவில் மழைநீர் வடிகால்வாய் கட்டுமானப் பணியை, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் நேற்று துவக்கி வைத்தார்.
உத்திரமேரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி 46வது வார்டு மாரியம்மன் கோவில் தெருவில் மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதியினர் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், மாநகராட்சி பொது நிதியில், 9.90 லட்சம் ரூபாய் செலவில், 260 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் கால்வாய் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
இதில், உத்திரமேரரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணியை துவக்கி வைத்தார். விழாவில் காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், மேயர் மகாலட்சுமி, தி.மு.க., வார்டு கவுன்சிலர் கயல்விழி உட்பட பலர் பங்கேற்றனர்.