/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழை பாதிக்கும் பகுதிகளில் திறந்து கிடக்கும் கால்வாய்கள்
/
மழை பாதிக்கும் பகுதிகளில் திறந்து கிடக்கும் கால்வாய்கள்
மழை பாதிக்கும் பகுதிகளில் திறந்து கிடக்கும் கால்வாய்கள்
மழை பாதிக்கும் பகுதிகளில் திறந்து கிடக்கும் கால்வாய்கள்
ADDED : அக் 09, 2025 11:21 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில், மழையால் பாதிக்கும் பகுதிகளில் , மழைநீர் கால்வாய் ஆப த்தான நிலையில் திறந்து கிடப்பதாக பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், அடுத்தடுத்த நாட்களில் மழை தீவிரமடையும் என்கின்றனர்.
மாவட்டம் முழுதும், மழை, வெள்ளம் பாதிக்கும், 72 இடங்களை தீவிரமாக கண்கா ணிக்க, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், மழை பாதிக்கும் இடங்களில், மழைநீர் கால்வாய்கள் திறந்து கிடக்கின்றன.
ஆபத்தா ன நிலையில், சாலையோரங்களில் இருக்கும் இந்த கால்வாய்களில், பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் விழும் அபாயம் உள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட, ஆவாக்குட்டை பகுதி அதிக மழை பாதிக்கும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில், மழைநீர் கால்வாய் ஆபத்தான நிலையில் திறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இங்கு மட்டுமல்லாமல், நகரின் பல இடங்களிலும் மழைநீர் கால்வாய்கள் ஆபத்தான நிலையில் திறந்து கிடக்கின்றன. அவற்றை மூடி, பாதசாரிகள், வாகன ஓட்டிகளை பாதுகாக்க வேண்டும் என, பகுதி மக்க ள் கோரிக்கை விடுத்துள்ளனர்.