ADDED : ஆக 21, 2026 05:12 PM
அ நிறம் | அளவு
வாலாஜாபாத்: கார் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாலாஜாபாத் காவல் நிலையத்தில் த.வெ.க., நிர்வாகி புகார் அளித்துள்ளார்.
இது குறித்து, வாலாஜாபாத் காவல் நிலையத்தில், த.வெ.க., ஒன்றிய அமைப்பாளரான சினேகா அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
எங்கள் ஊரில் சில நாட்களுக்கு முன் இசை கச்சேரி நடந்தது. இதில், என் தம்பிக்கும் சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் முன்விரோதம் காரணமாக, சிலர் எங்கள் தெருவில் கஞ்சா போதையில் இரு சக்கர வாகனத்தில் வலம் வந்தனர். மேலும், மாருதி காரின் கண்ணாடியை அடித்து உடைத்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
புகாரின்படி, வாலாஜாபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.
