/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதிய தார் சாலையில் எச்சரிக்கை தேவை
/
புதிய தார் சாலையில் எச்சரிக்கை தேவை
ADDED : ஏப் 10, 2025 01:30 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, செம்பரம்பாக்கம் - ஈஞ்சம்பாக்கம் - சிறுவாக்கம் மோட்டூர் கிராமத்திற்கு செல்லும், பிரதான நெடுஞ்சாலை உள்ளது.
காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை வழியாக செல்லும் பயணியர், கூரம் கேட் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, செம்பரம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், சிறுவாக்கம் மோட்டூர் ஆகிய கிராமங்களுக்கு செல்கின்றனர்.
இந்த சாலை, குண்டும் குழியுமாக மோசமான நிலையில் சேதமடைந்திருந்தன. கடந்த பிப்ரவரி மாதம் நபார்டு திட்டத்தின்கீழ், 1.40 கோடி ரூபாய் செலவில் சாலை போடும் பணி துவக்கப்பட்டு, இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
இதில், புதிய தார் சாலையோரம் மண்ணை அணைக்கவில்லை. மேலும், வேகத்தடைகள் மீது வண்ணம் பூசவில்லை என, வாகன ஓட்டிகள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், செம்பரம்பாக்கம் - ஈஞ்சம்பாக்கம் - சிறுவாக்கம் மோட்டூர் கிராம வழியாக செல்லுவோர் வாகன விபத்தில் சிக்க நேரிடும் அபாயம் உள்ளது.
எனவே, புதிய தார் சாலையோரம் மண் அணைக்கவும், வேகத்தடைகள் மீது வெள்ளை அடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

