/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புஞ்சையரசந்தாங்கலில் சிமென்ட் கல் சாலை அமைப்பு
/
புஞ்சையரசந்தாங்கலில் சிமென்ட் கல் சாலை அமைப்பு
ADDED : ஜூலை 11, 2025 01:05 AM

புஞ்சையரசந்தாங்கல்:புஞ்சையரசந்தாங்கல் ஊராட்சி, கோகுல் நகரில், 7 லட்சம் ரூபாய் செலவில், 100 மீட்டர் நீளத்திற்கு சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
காஞ்சிபுரம் ஒன்றியம், புஞ்சையரசந்தாங்கல் ஊராட்சி, கோகுல் நகரில், 70க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள சாலை, மண் சாலையாக இருந்ததால், மழைக்காலத்தில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக இருந்து வந்தது.
இதனால், இப்பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என கோகுல் நகரினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், ஊராட்சி நிர்வாகம் சார்பில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 7 லட்சம் ரூபாய் செலவில், 100 மீட்டர் நீளத்திற்கு, சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
சாலை அமைக்கும் பணி, ஓரிரு நாட்களில் முடிவு பெறும் என, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

