/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குன்றத்துாரில் பிரதமரின் வீடு கட்டும் பயனாளிகளிடம் விசாரித்த மத்திய குழு

ADDED : அக் 31, 2025 11:32 PM

காஞ்சிபுரம்: பிரதமரின் வீடுகட்டும் திட்டம் குறித்து, குன்றத்துார் ஒன்றியத்தில் பயனாளிகளிடம் மத்திய குழுவினர் நேற்று விசாரித்தனர்.
காஞ்சிபுரம், வாலாஜா பாத், உத்திரமேரூர், குன்றத்துார், ஸ்ரீபெரும் புதுார் ஆகிய ஐந்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் கட்டுப்பாட்டில், 274 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், மத்திய, மாநில அரசின் பல்வேறு திட்ட பணிகளை அரசு செயல்படுத்தி வருகின்றன.
இந்த பணிகளை, மத்திய செயலாக்க துறையினர், நேற்று, குன்றத்துார் ஒன்றியம், எழிச்சூர் கிராமத்தில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடுகளின் வசதிகள் குறித்து பயனாளிகளிடம் விசாரித்தனர்.
செரப்பணஞ்சேரி கிராமத்தில், பள்ளி வகுப்பறை கட்டடம்; படப்பை கிராமத்தில் பிரதமர் சாலை மேம்பாடு திட்டம்; கரசங்கல் பகுதியில், நாற்றங்கால் பண்ணை ஆகிய திட்டப் பணிகளை ஆய்வு செய்தனர்.