/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செந்துார் முருகன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
/
செந்துார் முருகன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : நவ 18, 2024 01:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை இந்திரா நகரில், செந்தூர் பாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு கணபதி ஹோமம், கோபூஜை, தனபூஜையுடன் யாகசாலை பூஜை துவங்கியது.
மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, ராஜபந்தனம், முதற்கால யாகபூஜை நடந்தது. காலை 7:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், கடம் புறப்பாடும் நடந்தது.
பின், மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, வேதவிற்பன்னர்கள் கோவில் கோபுர விமான கலசத்திற்கும், மூலவர் செந்துார் முருகப்பெருமானுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.