/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பெரிய காஞ்சிபுரம் தர்காவில் நாளை சந்தனகுட உத்சவம்
/
பெரிய காஞ்சிபுரம் தர்காவில் நாளை சந்தனகுட உத்சவம்
ADDED : அக் 08, 2025 03:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,:பெரிய காஞ்சி புரம் தர்காவில், சந்தனகுட உருஸ் உத்சவம் நாளை நடக்கிறது.
பெரிய காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில், ஹஜரத் சையத் ஷா ஹமீது அவுலியா பாதுஷா சிஷ்தி தர்கா உள்ளது. நடப்பு ஆண்டிற்கான சந்தனக்குட உருஸ் உத்சவம் நேற்று முன்தினம் இரவு, மக்ரிப் தொழுகைக்குப்பின், கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று, மாலை 6:30 மணிக்கு திருக்குரான் ஓதப்பட்டது. இன்று, இரவு 7:00 மணிக்கு அரபி மவுலுது மற்றும் உருது கஸிதா நடைபெறுகிறது.
நாளை இரவு, திருசந்தனகுட உருஸ் உத்சவம் நடக்கிறது.