ADDED : ஏப் 06, 2026 10:22 PM
சென்னை: ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, எழும்பூர் - மதுரை உட்பட ஐந்து விரைவு ரயில்களின் சேவையில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
சென்னை ரயில் கோட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், ரயில் பாதை மேம்பாட்டு பணிகள், இந்த மாதத்தில் நடக்க உள்ளன. இதனால், சில விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
★ சென்னை சென்ட்ரல் - மஹாராஷடிரா மாநிலம் சாய்நகர் ஷீரடி விரைவு ரயில், வரும் 22ம் தேதி காலை 10:20 மணிக்கு பதிலாக 11:20 மணிக்கு புறப்பட்டு செல்லும்
★ புதுச்சேரி - தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா மதியம் 12:45 மணி ரயில், இன்று ஒன்றரை மணி நேரமும், வரும் 14, 24, 28ம் தேதிகளில் ஒரு மணி நேரமும் தாமதம் ஏற்படும்.
★ புதுச்சேரி - ஆந்திரா மாநிலம் காக்கிநாடா மதியம் 1:30 மணி விரைவு ரயில், வரும் 9ம் தேதி, வழித்தடத்தில் 50 நிமிடங்களும், வரும் 11, 25ம் தேதிகளில் 30 நிமிடங்களும் தாமதம் ஏற்படும்
★ எழும்பூர் - மதுரை வைகை விரைவு ரயில் வரும் 16ல் ஒரு மணி நேரம் 10 நிமிடங்களும், வரும் 18, 20ம் தேதிகளில் ஒரு மணி நேரம் 15 நிமிடங்களும், 29ம் தேதியில் ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்
★ ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் - போத்தனுார் அம்ரித் பாரத் விரைவு ரயில் வரும் 13ல் தேதி ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் தாமதமாக வந்தடையும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
