/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம்
/
கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம்
ADDED : ஜன 19, 2025 02:57 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில், ஆதிகேசவ பெருமாள் மற்றும் கூரத்தாழ்வான் கோவில் உள்ளது. இக்கோவிலில், கூரத்தாழ்வானின் 1,015வது திருஅவதார மஹோத்ஸவம், கடந்த 11ம் தேதி திருப்பல்லக்கு ஆஸ்தான புறப்பாடுடன் துவங்கியது.
தினமும் காலை பல்லக்கிலும், இரவு ஸிம்மம், யாளி, மங்களகிரி, கமலாசனத் தொட்டி, சூரிய பிரபை, குதிரை, சந்திர பிரபை வாகனத்தில் கூரத்தாழ்வான் உலா வந்தார்.
எட்டாம் நாள் விழாவான நேற்று காலை திருப்பல்லக்கிலும், இரவு யானை வாகனத்திலும் கூரத்தாழ்வான் உலா வந்தார். இதில், ஒன்பதாம் நாள் பிரபல உற்சவமான தேரோட்டம் இன்று நடக்கிறது. இதில், காலை 7:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் கூரத்தாழ்வான் எழுந்தருள்கிறார்.
பல்வேறு பூஜைகளுக்கு பின் முக்கிய வீதி வழியாக தேரில் பவனி வருகிறார். மாலை 3:00 மணிக்கு திருமஞ்சனமும், திருப்பாவை சாற்றுமறை நடக்கிறது. இரவு ஹம்ஸ வாகனமும், திருமொழி சாற்றுமறையும்நடக்கிறது.