/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை பணி...முடக்கம்: நிதி நெருக்கடியால் நிறுத்தியது ஒப்பந்த நிறுவனம்
/
சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை பணி...முடக்கம்: நிதி நெருக்கடியால் நிறுத்தியது ஒப்பந்த நிறுவனம்
சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை பணி...முடக்கம்: நிதி நெருக்கடியால் நிறுத்தியது ஒப்பந்த நிறுவனம்
சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை பணி...முடக்கம்: நிதி நெருக்கடியால் நிறுத்தியது ஒப்பந்த நிறுவனம்
UPDATED : அக் 27, 2025 01:47 AM
ADDED : அக் 26, 2025 10:56 PM

காஞ்சிபுரம்: சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை பணிகள், ஒப்பந்த நிறுவனத்தின் நிதி நெருக்கடி காரணமாக முடங்கியுள்ளன. திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் இருந்து, கர்நாடகா மாநிலம், பெங்களூரு செல்வதற்கு மதுரவாயலில் இருந்து, காஞ்சிபுரம், வேலுார், கிருஷ்ணகிரி வழியாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
![]() |
இந்த சாலை வழியாக, சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல, ஏழு மணி நேரம் ஆகிறது. பயண நேரத்தை குறைக்கும் வகையில், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, சுங்குவார்சத்திரம், கோவிந்தவாடி, பாணாவரம், ராணிப்பேட்டை, ஒசகோட்டை வழியாக பெங்களூரு செல்வதற்கு, அதிவிரைவு சாலை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.
இந்த சாலை அமைக்கப்பட்டால், சென்னையில் இருந்து நான்கு மணி நேரத்தில், பெங்களூரு சென்றடையலாம்.
சாலை போடும் பணிக்கு, நிலம் கையகப்படுத்துவதற்கு, 2012ல், சிவன்கூடல், மொளச்சூர், சிறுவாக்கம், கோவிந்தவாடி, நெமிலி, பாணாவரம் ஆகிய கிராமமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள், தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடத்தினர்.
அடுத்தக்கட்டமாக, 2016ம் ஆண்டில், தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நிலங்களை கையகப்படுத்தினர். அதிவிரைவு சாலை விரிவாக்க பணிக்கு, 7,406 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.
இதில், 3,477 கோடி ரூபாய் கட்டுமான பணிக்கும்; 3,929 கோடி ரூபாய் நில எடுப்பிற்கும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிதி ஒதுக்கியது.
அதிவிரைவு சாலைக்கு, புதிய சாலை போடுவதற்கு, 2022 பிப்ரவரி மாதம் மண் மாதிரிகளை சேகரிக்கும் பணியை, தேசிய நெடுஞ்சாலை துறையினர் செய்தனர்.
முதற்கட்டமாக, கூத்தவாக்கம் ஏரி, மணியாட்சி, கோவிந்தவாடி ஏரி ஆகிய இடங்களில் உயர் மட்டபாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.
இதையடுத்து, உயர் மட்ட பாலங்கள் மற்றும் அந்த உயரத்திற்கு ஏற்ப, மண் சாலை போடும் பணியை, அந்தந்த சாலை போடும் ஒப்பந்தம் எடுத்தவர்கள் செய்து வருகின்றனர்.
சித்துார் முதல் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் வரை, 105 கி.மீ., சாலைப் பணி நடந்து வருகிறது. இதில், 76 கி.மீ., சாலைப் பணி நிறைவு பெற்று உள்ளது.
![]() |
ஏரிகளில் சாலைப் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளன. ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், மகேந்திரவாடி, உளியநல்லுார் ஆகிய கிராமங்களில் பில்லர் போடும் பணி அரை குறையாக உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி, சிறுவாக்கம் ஆகிய பகுதிகளில் பாலங்கள் இணைப்பு ஏற்படுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளன.
ஏற்கனவே, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிக்க வேண்டிய சாலைப் பணிகளுக்கு அடுத்த ஆண்டு மார்ச் வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நிதி நெருக்கடியால், ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் திணறி வருகிறது. கட்டுமான பணியில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்கள் முகாமில் இருந்து வெளியேறி, சொந்த ஊருக்கு சென்று விட்டனர். ராட்சத பொக்லைன் இயந்திரங்கள் மறறும் லாரிகள் மட்டுமே அங்கு நிறுத்தப்பட்டு உள்ளன.
இதனால், சென்னை - பெங்களூரு இடையே, அதிவிரைவு சாலை போடும் பணி முற்றிலும் முடங்கியுள்ளது.
பணி நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்து, வேறு புதிய ஒப்பந்தம் வழங்க, தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஆலோசனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ராணிப்பேட்டை மாவட்டம், மகேந்திரவாடி முதல், காஞ்சிபுரம் சிறுவாக்கம் வரையில், 23 கி.மீ.,க்கு அதிவிரைவு சாலை போடும் பணிகள் நடக்கவில்லை. ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்திற்கு, 2026 மார்ச் வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
நிதி நெருக்கடியை காரணம் காட்டி பணிகளை அந்நிறுவனம் நிறுத்திவிட்டது. புதிய நிறுவனத்தை தேர்வு செய்து, பணிகளை முடிப்பதற்கான பேச்சு டில்லியில் நடந்து வருகிறது. விரைவில் பணிகள் துவங்குவதற்கான சூழல் உருவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.


