sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை பணி...50 சதவீதம்!:எஞ்சிய வேலைக்கு கூடுதல் அவகாசம் கேட்பு

/

 சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை பணி...50 சதவீதம்!:எஞ்சிய வேலைக்கு கூடுதல் அவகாசம் கேட்பு

 சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை பணி...50 சதவீதம்!:எஞ்சிய வேலைக்கு கூடுதல் அவகாசம் கேட்பு

 சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை பணி...50 சதவீதம்!:எஞ்சிய வேலைக்கு கூடுதல் அவகாசம் கேட்பு


ADDED : ஏப் 28, 2024 01:47 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 01:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை போடும் பணி, 50 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், எஞ்சிய பணிகள் கூடுதல் அவகாசம் கேட்டு முடிக்கப்படும் என, சாலை போடும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் இருந்து, பெங்களூரு வரை, தங்க நாற்கர சாலை உள்ளது. இந்த சாலை வழியாக, சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல, ஏழு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும்.

பயண நேரத்தை குறைக்கும் பொருட்டு, ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, சுங்குவார்சத்திரம், கோவிந்தவாடி, பாணாவரம், ராணிப்பேட்டை, ஒஸ்கேட்டே வழியாக பெங்களூருக்கு செல்வதற்கு, அதிவிரைவு சாலை அமைக்கப்பட உள்ளன.

இச்சாலை அமைக்கப்பட்டால், சென்னையில் இருந்து நான்கு மணி நேரத்தில், பெங்களூரு சென்றடையலாம்.

இந்த சாலை போடும் பணிக்கு, நிலம் கையகப்படுத்துவதற்கு, 2012ம் ஆண்டு சிவன்கூடல், மொளச்சூர், சிறுவாக்கம், கோவிந்தவாடி, நெமிலி, பாணாவரம் ஆகிய கிராமவாசிகளிடம் கருத்து கேட்பு கூட்டங்கள், தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடத்தினர்.

அடுத்தக்கட்டமாக, 2016ல், நிலம் கையகப்படுத்தும் பணிக்காக, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நிலங்களை கையகப்படுத்தினர்.

அதிவிரைவு சாலை விரிவாக்க பணிக்கு, 7,406 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.

இதில், 3,477 கோடி ரூபாய் கட்டுமான பணிக்கும்; 3,929 கோடி ரூபாய் நில எடுப்பிற்கும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.

அதிவிரைவு சாலைக்கு, புதிய சாலை போடுவதற்கு, 2022ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் மண் மாதிரிகளை சேகரிக்கும் பணியை, தேசிய நெடுஞ்சாலை துறையினர் செய்தனர்.

முதல் கட்டமாக, கூத்தவாக்கம் ஏரி, மேபொடவூர், மணியாட்சி, கோவிந்தாவடி ஏரி ஆகிய இடங்களில் உயர்மட்ட தரைப்பாலம் கட்டும் பணி நடந்து வருகின்றன.

இதையடுத்து, உயர் மட்ட பாலங்கள் மற்றும் அந்த உயரத்திற்கு ஏற்ப, மண் சாலை போடும் பணியை, அந்தந்த சாலை போடும் ஒப்பந்தம் எடுத்தவர்கள் செய்து வருகின்றனர்.

சித்துார் - ராணிப்பேட்டை வரை, ராணிப்பேட்டை - காஞ்சிபுரம் வரை, காஞ்சிபுரம் - திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வரையில், 105 கி.மீ., துாரம் சாலை போடும் பணி நடந்து வருகிறது. இதில், 51.07 கி.மீ., துாரம் சாலை போடும் பணி நிறைவு பெற்று உள்ளன.

இன்னமும், 50 சதவீத பணிகள் திட்டமிட்ட தேதிக்குள் முடிக்க முடியாமல் போகும் சூழல் உருவாகி உள்ளது.

இருப்பினும், கூடுதல் அவகாசம் கேட்டு, சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க சாலை போடும் பணியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த பணிகள் நிறைவு பெற்றால், சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்லும் பயண நேரம் குறையும் என, சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இதுகுறித்து, சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை- - பெங்களூரு அதிவிரைவு சாலை போடும் பணிக்கு, மழைக்காலத்தில் மண் எடுப்பது தான் சவாலாக இருந்தது. தற்போது, கோடை காலம் என்பதால், விரைவாக பணிகள் முடிக்கப்படும்.

எஞ்சி இருக்கும் ஒரு சில பணிகளை கூடுதல் அவகாசங்கள் பெறப்பட்டு, பணிகள் முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மண் எடுத்து செல்லும் போது, சாலை மீது தண்ணீர் தெளிக்க வேண்டும். இதை தேசிய நெடுஞ்சாலை துறை பணி ஒப்பந்தம் எடுத்தவர்கள் செய்வதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், காஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி, வரதாபுரம், கொட்டவாக்கம், மணியாட்சி, மேல் பொடவூர் ஆகிய கிராமங்கள் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம், திருமால்பூர், பாணாவரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், நெல், காய்கறி ஆகிய விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

- -விவசாயிகள், கோவிந்தவாடி.

பணிகள் முடிந்த விபரம்:


திட்டம் மொத்தம் துாரம் முடிக்கப்பட்ட துாரம் முடிக்க வேண்டிய தேதி
சித்துார் - -ராணிப்பேட்டை 24 கி.மீ., 15.17 கி.மீ., 24.8.24ராணிப்பேட்டை 24.5 கி.மீ., 18.92 கி.மீ., 14.7.24ராணிப்பேட்டை-- காஞ்சிபுரம் 25.5 கி.மீ., 8.83 கி.மீ., 29.7.24காஞ்சிபுரம் - -திருவள்ளூர் 31.70 கி.மீ., 8.15 கி.மீ., 9.7.24








      Dinamalar
      Follow us