/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருமுக்கூடல் சாலையோரத்தில் கொட்டப்படும் கோழிக் கழிவால் நோய் தொற்றும் அபாயம்

ADDED : ஏப் 14, 2025 12:34 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா, திருமுக்கூடல் கிராமத்தில் இருந்து, வெங்கச்சேரி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி சுற்றுவட்டார 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர், உத்திரமேரூர், காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், திருமுக்கூடல் பகுதியில் சாலையோரத்தில், கோழிக்கழிவு கொட்டப்பட்டு வருகிறது. இந்த கோழிக்கழிவால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.
மேலும், கோழிக்கழிவால், நோய் தொற்று பரப்பும் கிருமிகள் உற்பத்தியாகி, அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள கோழிக்கழிவை அகற்ற, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.