/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரம் கோழி இறகு கழிவு வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
சாலையோரம் கோழி இறகு கழிவு வாகன ஓட்டிகள் கடும் அவதி
சாலையோரம் கோழி இறகு கழிவு வாகன ஓட்டிகள் கடும் அவதி
சாலையோரம் கோழி இறகு கழிவு வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : ஜன 30, 2025 11:36 PM

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் ஆறு வழிச்சாலை வழியாக,தினமும் பல்லாயிரக் கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஒரகடம்,சென்னக்குப்பம், மாத்துார்,போந்துார் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமத் தினர், இச்சாலையை பயன்படுத்தி ஸ்ரீபெரும்புதுார், சிங்கபெருமாள் கோவில், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
மேலும், ஒரகடம், வல்லம் வடகால், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் தொழிற்சாலைகளுக்கு, கார், பைக், தொழிற்சாலை பேருந்துகளில் பல்லாயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.
இந்த சாலையில், வல்லக்கோட்டை, மாத்துார், வல்லம் உள்ளிட்ட பகுதிகளில், சாலையோரம்பிளாஸ்டிக் குப்பை, கோழி இறைச்சி கழிவுகள்நிறைந்து காணப் படுகிறது.
இரவு நேரங்களில், சரக்கு வாகனங்களில் குப்பை, பிளாஸ்டிக், கோழி இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து, சர்வீஸ் சாலையோரங்களில் மர்ம நபர்கள்கொட்டி செல்கின்றனர்.இதனால், சர்வீஸ் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக, அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருவதால், வாகன ஓட்டிகள் தொற்று நோய் பரவும் அச்சத்தில் சென்று வருகின்றனர். மேலும், கோழி இறகுகள் காற்றில் பறந்து கண்களில் விழுவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, இச்சாலையோரம் உள்ள கழிவுகளை அகற் றுவதுடன், குப்பை கொட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.