/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாய்க்காலில் மூழ்கி குழந்தைஉயிரிழப்பு
/
வாய்க்காலில் மூழ்கி குழந்தைஉயிரிழப்பு
ADDED : ஜன 25, 2025 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பட்டு,
பள்ளிப்பட்டு அடுத்த கொளத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 25. இவரது மகள் பூஜா, 3. நேற்று காலை ரமேஷின் மாமனார் வடிவேலு,வீட்டிற்கு அருகிலுள்ள காட்டிற்கு, மூலிகைபறிக்கச் சென்றுள்ளார்.
அப்போது, குழந்தை பூஜாவும் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளது. இதை, கவனிக்காத வடிவேலு, இடையில் குறுக்கிட்ட வாய்க்காலை தாண்டிச் சென்றுள்ளார்.
பின்னால் சென்ற குழந்தை, அந்த வாய்க்காலில் விழுந்து தண்ணீரில் மூழ்கியுள்ளது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்தோர் மீட்டு, பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்ததை தெரிவித்தனர். பள்ளிப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.