/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அங்கன்வாடி அருகே கொட்டப்படும் குப்பையால் குழந்தைகளுக்கு பாதிப்பு
/
அங்கன்வாடி அருகே கொட்டப்படும் குப்பையால் குழந்தைகளுக்கு பாதிப்பு
அங்கன்வாடி அருகே கொட்டப்படும் குப்பையால் குழந்தைகளுக்கு பாதிப்பு
அங்கன்வாடி அருகே கொட்டப்படும் குப்பையால் குழந்தைகளுக்கு பாதிப்பு
ADDED : அக் 23, 2025 10:38 PM

ஸ்ரீபெரும்புதுார்: சுங்குவார்சத்திரம் அருகே, திருமங்கலம் அங்கன்வாடி மையம் அருகே கொட்டப்படும் குப்பை கழிவுகளால், துர்நாற்றம் மற்றும் கொசுக்கடி தொல்லையால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், திருமங்கலம் ஊராட்சி அலுவலகம் அருகே, செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள குடியிருப்பு மக்கள், சுங்குவார்சத்திரம் சாலையோரம் அங்கன்வாடி மையம் அருகே, குப்பை மற்றும் கழிவுகளை வீசி செல்கின்றனர்.
இதனால், துர்நாற்றம் மற்றும் கொசுக்கடி தொல்லையால், அங்கன்வாடி குழந்தைகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
அதேபோல, அங்கு கொட்டப்படும் குப்பையை தீயிட்டும் கொளுத்துகின்றனர்.
அதிலிருந்து வெளியேறும் புகையால், குழந்தைகளுக்கு மூச்சு திணறல் மற்றும் சுவாச கோளாறு பிரச்னை ஏற்படுகிறது.
எனவே, குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு, அங்கன்வாடி அருகே குப்பை கொட்டுவதை, ஊராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும் என, குழந்தைகளின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துஉள்ளனர்.