தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ அடிப்படை வசதிகளின்றி அங்கன்வாடி மையம் குழந்தைகள் அவதி

அடிப்படை வசதிகளின்றி அங்கன்வாடி மையம் குழந்தைகள் அவதி

அடிப்படை வசதிகளின்றி அங்கன்வாடி மையம் குழந்தைகள் அவதி


ADDED : ஜூன் 16, 2025 11:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2025 11:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உத்திரமேரூர், பெரிய ஆண்டித்தாங்கலில் நுாலக கட்டடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில், போதிய வசதிகள் இல்லாததால், குழந்தைகள் அவதியடைந்து வருகின்றனர்.

உத்திரமேரூர் ஒன்றியம், திணையாம்பூண்டி ஊராட்சியில், பெரிய ஆண்டித்தாங்கல் துணை கிராமம் உள்ளது. இங்குள்ள, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகத்தில், அங்கன்வாடி மையம் இயங்கி வந்தது.

இந்த அங்கன்வாடி மைய கட்டடம் பழுதடைந்து இருந்ததால், 2022ல் இடித்து அகற்றப்பட்டது. அதிலிருந்து, அங்கன்வாடி மையம் அப்பகுதியில் உள்ள நுாலக கட்டடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது.

இந்த அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். தற்போது, நுாலக கட்டடத்தில் போதிய குடிநீர் வசதி, கழிப்பறை வசதி இல்லாமல் உள்ளது.

இதனால், குழந்தைகளுக்கு உணவு சமைக்க, அங்கன்வாடி ஊழியர்கள் நீண்ட துாரம் சென்று தண்ணீர் எடுத்துவர வேண்டிய நிலை உள்ளது. மேலும், பணியாளர்கள் மற்றும் குழந்தைகள் இயற்கை உபாதைகளை கழிக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்டக்கோரி, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us