/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சின்னசேக்காடு அரசு பள்ளிஹாக்கியில் மீண்டும் சாதனை
/
சின்னசேக்காடு அரசு பள்ளிஹாக்கியில் மீண்டும் சாதனை
ADDED : டிச 07, 2024 01:06 AM

மணலி,
பள்ளிக் கல்வித்துறை சார்பில், வருவாய் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள், இந்த வாரம் மூன்று நாட்கள் நடந்தன.
எழும்பூர், ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில், 14 வயதிற்குட்பட்ட மாணவர்கள் அணியில், மணலியை அடுத்த சின்னசேக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்று விளையாடினர்.
அவர்கள் காலிறுதியில், மதுரவாயல் அரசு உயர்நிலைப் பள்ளியை 4 - 0 என்ற கோல் கணக்கிலும், அரையிறுதியில், புரசைவாக்கம் செயின்ட் பால்ஸ் மேல்நிலைப் பள்ளி அணியை 4 - 0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தினர்.
இறுதிப் போட்டியில், தேனாம்பேட்டை அஞ்சுமன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியுடன் பலப்பரீட்சை நடத்தியதில் 2 - 0 என்ற கோல் கணக்கில் வென்று, சாம்பியன் பட்டம் வென்றனர்.
முதலிடம் பிடித்த சின்னசேக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி அணியினர், தேனி மாவட்டத்தில் பிப்ரவரியில் நடக்கவிருக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளளனர்.
அந்த வகையில், தொடர்ச்சியாக சின்னசேக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அணி, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில், மாநில போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.
இம்முறை வெற்றி பெற்றிருப்பதன் மூலம் மூன்றாவது முறையாக மாநில போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி தலைமை ஆசிரியை உஷா, பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் லுாயிஸ் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.