/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
லிங்காபுரம் தேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
/
லிங்காபுரம் தேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
லிங்காபுரம் தேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
லிங்காபுரம் தேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
ADDED : ஏப் 28, 2025 01:36 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் ஊராட்சியில் மதுரா லிங்காபுரம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில், தேவி எல்லையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 18ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதணைகள், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் இறுதி நாளான நேற்று, காலை 6:00 மணிக்கு சிறப்பு தீபாராதணை நடந்தது. அதை தொடர்ந்து கோவில் வளாகத்தில், பெண் பக்தர்கள் ஊரணி பொங்கலிட்டு அம்மனுக்கு படையலிட்டனர்.
மதியம் 12:00 மணிக்கு கலசநீர் சேகரித்து அம்மன் பூங்கரகம் ஊர்வலமும், 2:00 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபட்டனர்.