/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழா துவக்கம்
/
எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழா துவக்கம்
ADDED : ஏப் 19, 2025 12:34 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் ஊராட்சியில், மதுரா லிங்காபுரம் கிராமத்தில், ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம்.
இவ்விழாவில், தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
விழாவின் இறுதி நாளான 10வது நாளில், சிறப்பு தீபாராதனை, ஊரணிப்பொங்கல், கலசநீர் சேகரிப்பு, கூழ்வார்த்தல், அம்மன் பூங்கரக ஊர்வலம் மற்றும் இரவு மலர் அலங்கார வீதியுலா போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா, கொடியேற்றத்துடன் நேற்று காலை துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.