/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா வரும் 4ல் துவக்கம்

ADDED : ஏப் 26, 2025 06:59 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை உத்திரப்பெருவிழா 15 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி நடப்பாண்டிற்கான உத்சவம் வரும் மே 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, மே 18ம் தேதி ஊஞ்சல் உத்சவத்துடன் நிறைவு பெறுகிறது.
விழாவையொட்டி தினமும் காலை 7:30 மணிக்கும், இரவு 8:00 மணிக்கும் பல்வேறு வாகனத்தில், சுந்தராம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளும் கச்சபேஸ்வரர் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருகிறார்.
தினமும், மாலை 6:00 மணிக்கு திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் அரங்கில், வாரியார் ஆன்மிக தொண்டு மன்றத்தினரின், திருமுறை, சொற்பொழிவு, இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் ராஜமாணிக்கம், காஞ்சிபுரம் நகர செங்குந்த மகாஜன சங்கத்தினர், நிர்வாக குழுவினர், விழாக்குழுவினர், அர்ச்சகர்கள், உபயதாரர்கள், கோவில் பணியாளர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.