ADDED : மே 18, 2025 10:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், பெரியாண்டவர் கோவில் உள்ளது.
இங்கு, நேற்று, சித்திரை மாத பொங்கல் விழா நடந்தது. பிற்பகல், 12:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. அதை தொடர்ந்து, பக்தர்கள் பொங்கலிட்டு பெரியாண்டவருக்கு படையலிட்டனர்.
கோவிந்தவாடி, கம்மவார்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று, பெரியாண்டவரை வழிபட்டு சென்றனர்.