/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அழகர் பெருமாள் கோவிலில் சித்திரை பவுர்ணமி விமரிசை
/
அழகர் பெருமாள் கோவிலில் சித்திரை பவுர்ணமி விமரிசை
ADDED : மே 13, 2025 12:59 AM

ஸ்ரீபெரும்புதுார் :ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், அழகூர் கிராமத்தில் அழகர் பெருமாள் கோவில் உள்ளது. இக் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பவுர்ணமி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்தாண்டு சித்திரை பவுர்ணமி விழா நேற்று நடந்தது. காலை 6:00 மணிக்கு அழகர் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் அபிசேகம் நடந்தது. 7:00 மணிக்கு அழகர் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதை தொடர்ந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு வீதியுலா சென்று அருள்பாலித்தார்.
மாலை 7:00 மணிக்கு விஜயநகர அழகர் குளத்தில், அழகர் பெருமாளின் தெப்ப உற்சவம் நடந்தது. இதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.