/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
துாய சகாய அன்னை சர்ச்சில் கிறிஸ்துமஸ் குடில்
/
துாய சகாய அன்னை சர்ச்சில் கிறிஸ்துமஸ் குடில்
ADDED : டிச 26, 2025 06:21 AM

படப்பை: குன்றத்துார் அருகே, படப்பையில் துாய சகாய அன்னை சர்ச் உள்ளது. இங்கு கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு திருப்பலி பங்கு நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.
மேலும், கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு இயேசு கிறித்துவின் பிறப்பு நிகழ்வை சித்தரிக்கும் வகையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட குடிலை கிறிஸ்துவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் ஆர்வத்துடன் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து சென்றனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு சர்ச்சுகளில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள சி.எஸ்.ஐ., சர்ச், தாமல்வார் தெரு துாய இதய அன்னை சர்ச் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சுகளில் நேற்று முன்தினம் இரவு, வண்ணமயான மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
கிறிஸ்துமஸ் தினமான நேற்று காலை சர்ச்சில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.

