/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இலவச வீட்டுமனை பட்டா வழங்க பேரூராட்சி ஒப்புதல்
/
இலவச வீட்டுமனை பட்டா வழங்க பேரூராட்சி ஒப்புதல்
ADDED : ஜூலை 01, 2025 08:55 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 13 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்க பேரூராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையை சுற்றியுள்ள 'பெல்ட் ஏரியா' எனப்படும் 32 கி.மீ., துாரத்தில், ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு, ஒருமுறை சிறப்பு வரன்முறைபடுத்தும் திட்டத்தில் பட்டா வழங்க, பிப்.10ல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பேரூராட்சியில் மல்லியங்கரனை, வேடபாளையம் ஆகிய பகுதிகளில் மயானம், வண்டிப்பாதை தெரு ஆகிய பகுதிகளில் வசிப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்க வருவாய் துறையினர் முடிவு செய்தனர்.
அதற்காக, உத்திரமேரூர் பேரூராட்சியில் அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்போரை வருவாய் துறையினர் ஆய்வு செய்து, 13 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்க தேர்வு செய்தனர்.
இந்நிலையில், அவர்களுக்கு பட்டா வழங்க ஒப்புதல் பெற, வருவாய் துறையினர் உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பரிந்துரைத்தனர்.
தற்போது, உத்திரமேரூர் பேரூராட்சியில் ஆட்சேபனையற்ற நிலத்தில் வசிப்போருக்கு, ஒருமுறை சிறப்பு வரன்முறைபடுத்தும் திட்டத்தில் வீட்டுமனை பட்டா வழங்க பேரூராட்சி நிர்வாகத்தினர் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இதையடுத்து, உத்திரமேரூர் பேரூராட்சியில் 13 பேருக்கு விரைவில் பட்டா வழங்க உள்ளதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.