UPDATED : ஜூலை 05, 2026 06:21 PM
ADDED : ஜூலை 05, 2026 05:10 PM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த திருப்பனமூரில் மகாதேவி உடனுறை மகாதேவர் கோவில் உள்ளது. மிக பழமையான இக்கோவிலில் , காஞ்சி நால்வர் நற்பணி குழுவினர் துாய்மை பணி மேற்கொண்டனர்.
கோவில் வளாகத்தில் குவிந்திருந்த குப்பைகளையும், தேவையற்ற செடி, கொடிகளை அகற்றினர். கோவில் கோபுரங்களின் மீது படிந்திருந்த துாசுகளையும், பிற விக்ரஹங்களையும், பூஜை பொருட்கள், சுவாமி அலங்கார பொருட்களை சுத்தப்படுத்தினர்.
