ADDED : செப் 24, 2025 10:23 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் உள்ள புத்தர் கோவிலில், 'தி நியூ இந்தியா இன்சூரன்ஸ்' நிறுவன பணியாளர்கள் துாய்மை பணி மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் - வையாவூர் சாலை, கோனேரிகுப்பம் ஊராட்சி, காமாட்சியம்மன் நகரில், போதி தர்மர் புத்த விஹார் எனப்படும் புத்தர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகம் கோவில் அமைந்துள்ள பகுதியில், காஞ்சிபுரம், 'தி நியூ இந்தியா இன்சூரன்ஸ்' நிறுவனத்தின் சார்பில், மத்திய அரசின், துாய்மை இந்தியா திட்டத்தின், 'சுவச்சதா ஹை சேவா' திட்டத்தின் கீழ், துாய்மை பணி மேற்கொண்டனர்.
துாய்மை பணியாளர்களை கவுரபடுத்தும் விதமாக அவர்களோடு இணைந்து நிறுவனத்தின் கோட்ட மேலாளர் டி.அபிஷேக் தலைமையில் காப்பீட்டு நிறுவன பணியாளர்கள் துாய்மை பணியில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் புத்த விஹாரின் தலைவர் திருநாவுக்கரசு, செயலர் நாகராஜ், பொருளாளர் கவுதமன் ஆகியோர் உடன் இருந்தனர்.