ADDED : மார் 18, 2025 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவந்தவார்; சென்னை சிவா - சிவன டியார்கள் முன்னேற்ற நலசங்கம், காஞ்சிபுரம் கிளை திருமருள்நீக்கியார் கோவிலை துாய்மை படுத்தும் பணி குழு சார்பில், உத்திரமேரூர் தாலுகா திருவந்தவார் கிராமத்தில் உள்ள திரிபுரசுந்தரி உடனாய திருவந்தவந்தீச்சுரர் கோவிலில் துாய்மைப் பணி நேற்று முன்தினம் நடந்தது.
இதில், கோவில் கோபுரம், மதில்சுவர், கோவில் பிரகாரத்தில் வளர்ந்திருந்த செடி, கொடிகளை வேருடன் அகற்றினர். உட்பிரகாரத்தில் ஒட்டடை அடித்து தரைப்பகுதியை துாய்மைப்படுத்தினர். மேலும், சுவாமிக்கு பூஜை செய்ய பயன்படுத்தும் பூஜை பொருட்களை சுத்தம் செய்தனர்.