/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாதாள சாக்கடையில் அடைப்பு மாட வீதியில் தேங்கி நிற்கும் மழைநீர்
/
பாதாள சாக்கடையில் அடைப்பு மாட வீதியில் தேங்கி நிற்கும் மழைநீர்
பாதாள சாக்கடையில் அடைப்பு மாட வீதியில் தேங்கி நிற்கும் மழைநீர்
பாதாள சாக்கடையில் அடைப்பு மாட வீதியில் தேங்கி நிற்கும் மழைநீர்
ADDED : செப் 23, 2025 12:28 AM

காஞ்சிபுரம்:கச்சபேஸ்வரர் கோவில் மாட வீதியில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, மழைநீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் கடக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், நான்கு மண்டலங்களில், 51 வார்டுகள் உள்ளன. இதில், 1,000க்கும் மேற்பட்ட தெருக்களில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுகிறது.
இருப்பினும், கச்சபேஸ்வரர் கோவில் மாட வீதியில், அடிக்கடி பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, கோழி இறைச்சி கழிவு, வாகனங்கள் சுத்தம் செய்யும் மண் கழிவால் பாதாள சாக்கடை திட்ட குழாயில் அடைப்பு ஏற்படுவதாகவும்.
மழைக்காலத்தில் தண்ணீர் வெளியேற வழியின்றி, குளம் போல் தேங்கி நிற்கிறது என, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், கச்சபேஸ்வரர் கோவில் மாட வீதி வழியாக செல்லும் ஓ.பி.,குளம், பல்லவர் மேடு உள்ளிட்ட பல்வேறு தெருவினர் மழைநீரில் கடந்து செல்ல வேண்டி உள்ளது.
சில நேரங்களில், மழைநீரில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கவிழும் நிலை உள்ளது.
எனவே, கச்சபேஸ்வரர் கோவில் மாட வீதியில் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க, பாதாள சாக்கடை திட்ட குழாய் அடைப்பை நீக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.