/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பேருந்து நிலையத்தில் மூடி கிடக்கும் கூட்டுறவு சங்க பால் விற்பனை நிலையம்

ADDED : செப் 24, 2024 10:56 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், நகர பேருந்துகளுக்கான டைம் கீப்பர் அலுவலகம் அருகில், திருக்காலிமேடு திருவள்ளுவர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் சூடான பால் விற்பனை நிலையம் இயங்கி வந்தது.
பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பயணியர், குழந்தைக்கு புட்டி பால் புகட்டுவோர், அரசு தனியார் போக்குவரத்து ஊழியர்கள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்டோர் கூட்டுறவு பால் விற்பனையகத்தில், 12 ரூபாய்க்கு ஒரு டம்ளர் சூடான பால் அருந்தி வந்தனர்.
இந்நிலையில், பால் விற்பனை நிலையம், மூன்று மாதங்களாக மூடி கிடக்கிறது.
எனவே, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், மூன்று மாதங்களாக மூடி கிடக்கும் திருக்காலிமேடு திருவள்ளுவர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் சூடான பால் விற்பனை நிலையத்தை திறக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து கூட்டுறவு சங்க அலுவலரிடம் ஒருவரிடம் கேட்டபோது, 'சூடான பால் விற்பனை நிலையத்தில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும் திறக்கப்படும்' என்றார்.