/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கூட்டுறவு சங்க பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
/
கூட்டுறவு சங்க பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
ADDED : அக் 23, 2024 06:39 PM
ஸ்ரீபெரும்புதுார்:தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவில் அருகே நேற்று நடந்த போராட்டத்தை காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சேரன் தலைமை தாங்கினார்.
இதில், தமிழக முழுதும் உள்ள நியாய விலை கடை பணியாளர்களை சொந்த மாவட்டத்திலும், குறைந்தது 10 கி.மீ., தொலைவிற்குள் பணியமர்த்த வேண்டும். கூட்டுறவு நியாய விலை கடைகளில் கட்டுப்பாடு அற்ற பொருட்களை அதிகமாக இறக்கி, விற்பனை செய்ய குறியீடு நிர்ணயம் செய்வதை கைவிட வேண்டும்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்க விற்பனையாளர்களிடம் அபராத தொகையை இருமடங்காக வசூலிப்பதை அரசு ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி, 50க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

